வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரியங்கா மோகன்... எந்த நாட்டுக்கு தெரியுமா?
நடிகை பிரியங்கா மோகன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று ட்ரெண்டிங் உடையில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா மோகன்
"ஒந்து கதை ஹெல" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் தான் பிரியங்கா மோகன்.
அதனை தொடர்ந்து நடிகர் நானி நடிப்பில் வெளியான "கேங் லீடர்" திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.
அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில் அறிமுகமான இவருக்கு முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவர்களின் கெமிஷ்ரி திரையில் நன்றாக இருந்ததால், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டான்' படத்தில் நடிக்கும் வாப்ப்பை பெற்றார்.இந்த படமும் ஹிட்டானதால் தழிழிலும் இவருக்கொன ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
இதனை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக, 'எதற்கும் துணிந்தவன்', தனுஷுக்கு ஜோடியாக 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
இறுதியாக தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் கோல்டன் ஸ்பேரோ... பாடலுக்கு இவர் ஆடிய நடனம் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ள பிரியங்கா மோகன் இஸ்தான்புல் நகரில் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |