“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில்
பிரபல ரிவி தொகுப்பாளினியான பிரியங்காவின் கணவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவை அவதானித்த ரசிகர்கள் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் பதிவிட்டுவருகின்றனர்.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் பிரவீன் என்பவரைக் காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்பு கருத்து வேறுபாடு 2022ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
எப்பொழுதும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை சற்று சறுக்கலாகவே இருந்த நிலையில், தற்போது வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
வசியின் இன்ஸ்டா பதிவு
பிரியங்காவின் கணவர் வசியின் இன்ஸ்டா பதிவில், பிரியங்காவை திருமணம் செய்த புகைப்படத்தை பதிவிட்டு, பிரியங்காவுடன் வாழ்க்கை வாழ்வதற்கு கையெழுத்திட்டாச்சி என்று கூறியுள்ளார்.
இவரது பதிவினை அவதானித்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கொட்டி வருகின்றனர். மேலும் அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சாரே... என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதே போன்று பிரியங்காவும் தனது சமூக வலைத்தளத்தில் திருமண புகைப்படத்தினை வெளியிட்டு, Life Update: Going to be chasing sunsets with this one என்று பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |