திருமணத்துக்கு தடபுடலாக ரெடியான பிரியங்கா- விமர்சனத்திற்குள்ளாகும் Video
திருமணத்திற்கு தடபுடலாக ரெடியான பிரியங்காவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.

இதற்கிடையில், சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
தடபுடலாக ரெடியான பிரியங்கா
இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தும் பிரியங்கா கணவருடன் செய்யும் அலப்பறைகளை காணொளிகளாக பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், திருமணத்திற்கு ரெடியாகும் காட்சியை காணொளியாக பதிவிட்டுள்ளார். அதற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், தம்பதிகளை கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        