வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த பிரியங்கா- நிக் ஜோனஸ் தம்பதி
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர் பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் தம்பதியினர்.
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
தன்னைவிட வயது குறைந்த பாடகரான நிக் ஜோனஸை, பிரியங்கா திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சூழலில், தற்போது வாடகைத்தாய் மூலம் பெற்றோர் ஆகியுள்ளனர்.
இது குறித்து இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதில் "நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
அதே வேளையில் நாங்கள் எங்களின் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரம் கருதி யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். மிக்க நன்றி" என பதிவிட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 4 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022