ட்விட்டரில் மல்லுக்கட்டிய நடிகை பிரியா பவானி சங்கர்- நெட்டிசன்கள் சரமாரியான கேள்வி
சமீபத்தில் நடந்து முடித்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஸ்டாலின் வாழ்த்த, நடிகை பிரியா பவானி சங்கர் ட்விட்டரில், நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாடு.
பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக் கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்" என கூறி உள்ளார்.
இதற்கு நெட்டிசன் ஒருவர், சகோதரி முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம்'' என பதிவிட்டார்.
அதற்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து இங்கி பிங்கி போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது. 6வது வகுப்பில் நானும் குடிமக்கள் பற்றி நிறைய படிச்சிருக்கேன். மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை என பதிவிட்டார்.
மற்றொருவர் இவர் பதில் கொடுத்ததற்கு, மேடம் இன்னும் 5 வருஷத்துல ரெட் ஜெயன்ட் மூவிஸ் ,கிளவுட் நயன் மூவிஸ் உள்ளிட்ட இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க'' என பதிவிட்டார்.
அதற்கு பிரியா, ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி டுவீட் போட்டுகிட்டு இருக்கேன்'' என பதிவிட்டுள்ளார்.
நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள்🙏🏼😊
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 3, 2021
take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை https://t.co/qHjzK4tQTu
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 4, 2021
ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல😎 https://t.co/YfMC8YuZ7M
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 4, 2021