கணவருடன் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரியா ராமன்: பிரிவை சந்தித்தவர்களின் புதிய ரொமான்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியலான செந்தூரப்பூவே ரஞ்சித் ஹீரோவாக நடித்து வருகின்றார்.
இந்த சீரியலில் மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவர் ரோஜாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.
ரோஜாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி அவருடைய கணவர் இறந்து விடுகிறார். இது தெரியாமல் ரோஜாவுக்கும் ரஞ்சித்துக்கும் திருமணம் நடைபெறுகிறது. இந்த நிலையை தற்போது கயல் தன்னுடைய அம்மாவை பார்க்க வேண்டும் என அடம் பிடிக்கின்றார்.
இதனால் தன்னுடன் அறைக்கு அழைத்துச் சென்று ஒரு புகைப்படத்தை பிரிக்க சொல்கிறார். அதில் ப்ரியா ராமனின் புகைப்படம் வரையபட்டிருந்தது. இது தான் உங்க அம்மா என்று ரஞ்சித் கூறியுள்ளார்.
இதனால் பிரியா ராமன் பிரபல ரிவி சீரியலில் எண்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களின் காதல் கதையினை தற்போது பிரபல ரிவி ஒளிபரப்பாகவுள்ளது. இதன் ப்ரொமோ தற்போது வெளியாகியுள்ளது.
