நீச்சல் குளத்தில் கூலா போஸ் கொடுத்த ப்ரியா பவானி சங்கர் - வைரலாகும் புகைப்படம்!
நீச்சல் குளத்தில் கூலா போஸ் கொடுத்த ப்ரியா பவானி சங்கரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியா பாவனி சங்கர்
செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரியா பவானி சங்கர். கடந்த 2017ம் ஆண்டு மேயாத மான் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன்பின்பு, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா: அத்தியாயம் போன்ற உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும், கடந்த மாதம் உலகமெங்கும் வெளியான சிலம்பரசனின் பத்து தல படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கமலஹாசனின் இந்தியன் 2, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற படங்களில் டாப் நடிகர்களுடன் இவர் இணைந்துள்ளார். அதிலும் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக இருக்கும் ருத்ரன் படத்தின் பட ப்ரோமோஷன் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.
வைரலாகும் கூலான புகைப்படம்
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் அவர் நீச்சல் குளுத்தில் கூலாக போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.