5 கோடிக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் திருமண கவுன்! ஸ்பெஷல் என்ன தெரியுமா?
பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற ஏலத்தில் இளவரசி டயானா திருமணத்தின் போது அணிந்திருந்த கவுன் ரூ.4.9 கோடிக்கு ஏலம் போயுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசி டயானா
பிரிட்டன் இளவரசராக இருந்த சார்லஸ் மற்றும் டயானா இருவரது திருமண நிகழ்ச்சியில் டயானா அணிந்திருந்த ஊதா நிற கவுன் மிகவும் புகழ்பெற்றது.
இந்த கவுன் காண்பவர்கள் அனைவரையும் கவரும் வகையில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டதுடன், இதில் ஆயிரக்கணக்கான முத்துகள், பட்டு இழைகள் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
1991ம் ஆண்டு வரையப்பட்ட அவரது ஓவியத்திலும் டயானா இந்த கவுன் அணிந்திருக்கிறார். பின்னர் 1997ம் ஆண்டு நடைபெற்ற போட்டோஷூட்டிலும் இதே கவுனில் தான் காட்சி அளித்திருந்தார்.
விக்டர் எடெல்ஸ்டீன் என்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய இந்த பிரபலமான கவுன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பே ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வந்துள்ளது.
இந்த ஏலத்தில் குறித்த கவுன் 6 லட்சம் டொலருக்கு ஏலம் சென்றுள்ளது. அதாவது இந்திய ரூபாயில் ரூ.4.9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த விலை ஏலத்திற்கு கணிக்கப்பட்ட விலையினை விட ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.