17 வயதில் சொகுசு கார் தொடக்கம் 30 பில்லியனுக்கு சொந்தகாரி - யார் இந்த இளவரசி
வெறும் 17 வயதில், ஆடம்பரத்தையும் மற்றவர்கள் கனவுகளில் மட்டுமே காணும் வாழ்க்கையை நிஜத்தில் வாழ்த்து வரும் இளவரசியின் வாழ்க்கை அம்சங்களை பதிவில் பார்க்கலாம்.
அமீரா வார்டதுல் போல்கியா
புருனேயின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் இளைய மகள் இளவரசி அமீரா வார்டதுல் போல்கியா, இவர் 17 வயதில் தனது அரசை வாழ்க்கை மூலம் பல மக்களின் கனவை ஈர்த்துள்ளார்.
தற்போது வசதியாக வாழ வேண்டும் என்று பலர் காணும் கனவை நினைவாக்கி வாழ்ந்து வருகிறார் அமீரா.

இவர் 2008-ம் ஆண்டு மலேசிய தொலைக்காட்சி தொகுப்பாளர் அஸ்ரினாஸ் மசார் ஹக்கீமுக்கு பிறந்தார். அமீரா உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்துவரும் பணக்கார மன்னர்களில் ஒருவருமான சுல்தான் போல்கியாவின் 12 குழந்தைகளில் ஒருவர்.
இதன்படி அமீராவின் சொத்து மதிப்பு தோராயமாக 20-30 பில்லியன் டாலர் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த சொத்துக்கள் பெரும்பாலானவை புருனேயின் பரந்த எண்ணெய் இருப்புக்கள் மூலம் கிடைத்தவையாகும்.
இவர் என்ன தான் அரச வாழ்க்கை வாழ்ந்தாலும் இவரது வாழ்க்கையிலும் சில கசப்பான சம்பவங்களை கட்ந்து தான் வந்துள்ளார். அவரது பெற்றோர் 2005-ல் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், 2010-ல் விவாகரத்தின் மூலம் பிரிந்தனர். அன்றிலிருந்து தன் தந்தை சுல்தான் பராமரிப்பின் கீழ் தான் அமீரா வளர்கிறார். அரச சூழலுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தபோதிலும், பெற்றோரின் பிரிவு அவரது இளம் வயதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கவர்ந்திழுக்கும் கண்கள், நீண்ட கருமையான கூந்தல் மற்றும் பிரகாசமான புன்னகை மூலம் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான பலரை ஈர்த்து வருகிறார்.

இவரின் ஆடம்பர வாழ்க்கை பல சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் டிக்டாக் பேஸ்புக் போன்றவற்றில் இணையவாசிகளை ஈர்த்து வைத்துள்ளது. அவர் தனது படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |