மறைந்த இளவரசர் பிலிப் போன்றே இளவரசர் ஹரி- வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்
இளவரசர் பிலிப்புக்கானாலும் சரி, மகாராணியாருக்கும் சரி, பேரன் ஹரியை அவ்வளவு பிடிக்கும் என்ற விடயம் பலரும் அறிந்ததே.
இந்நிலையில், இளவரசர் பிலிப் இயற்கை எய்திய நிலையில், இளவரசர் ஹரியின் புகைப்படம் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
அந்த புகைப்படத்தில், தாடியுடன் காட்சியளிக்கிறார் ஹரி. அந்த புகைப்படத்தை ராஜ குடும்ப புகைப்படக்கலைஞரான கிறிஸ் ஜாக்சன் என்பவர் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படம் இளவரசர் பிலிப்பின் இள வயது புகைப்படம் ஒன்றை நினைவுபடுத்ததாக தெரிவித்துள்ளார் ஜாக்சன்.
இளவரசர் பிலிப் மற்றும் ஹரி இருவருமே நீலக்கண்களுடன், அதே பழுப்பு நிற தாடியுடன் சீருடையில் இருக்கும் படங்களை ஒப்பிட்டுள்ள ஜாக்சன், தாத்தா பிலிப்பைப் போலவே பேரன் ஹரி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த படங்களைப் பார்த்தவர்களும், தாத்தாவும் பேரனும் ஒரே மாதிரி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதோடு, தாங்கள் இளவரசர் பிலிப்பின் புகைப்படத்தைப் பார்த்தபோது, அதை ஹரி என்றே நினைத்ததாக கூறி தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் எடுக்கும்போது இருவருக்குமே 36 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.