கருப்பு நிற ஆடையில் வசீகரம் செய்த தமன்னா- லெஹெங்கா விலை என்ன?
ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் நடிகை தமன்னா அணிந்திருந்த ஆடையின் விலை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமன்னா
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா.
முதல் திரைப்படம் இவருக்கு சரியான வரவேற்பை எடுத்து கொடுக்காவிட்டாலும் இவரின் அழகிற்காக வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தன.
காலப்போக்கில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி விட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது சமிபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான “ஜெய்லர் ” படத்தில் நடித்திருந்தார். இதற்காக 3 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது.
லெஹங்கா விலை என்ன தெரியுமா?
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் தமன்னா ஆன்ந்த அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணத்தில் விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.
திருமண விழாவில் நடிகை தமன்னா கறுப்பு நிறம் மற்றும் தங்கத்தால் ஆன உடையை அணிந்திருந்தார்.
பார்ப்பதற்கு மணப்பெண் போன்று காட்சியளித்த தமன்னாவின் லெஹங்காவின் 3.85 லட்சம் வரை விலை போகும் என கூறப்படுகின்றது.
இந்த உடையை டோரனி எனப்படும் வடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளார்.
இதன்போது தமன்னா எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |