பொடுகு மற்றும் முடி உதிர்வை தடுக்கும் வெந்தயப்பொடி ஷாம்பூ... எப்படி செய்யலாம்?
தலைமுடிக்கு இரசாயன ஷாம்பூ பயன்படுத்தாமல் இயற்கையாக மூன்று பொருள் கொண்டு வீட்டிலேயே ஷம்பூ செய்யும் முறை பார்க்கலாம்.
ஷாம்பூ செய்யும் முறை
குளிர்காலத்தில் நம் சருமம் மட்டும் வறண்டு போகாது. நமது தலைமுடியும் பல பிரச்சனைகளை உள்வாங்கும். இதனால் பொடுகு பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கும்.
தலையில் அmதிகமாக பொடுகு இருந்தால் அது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் நாம் பல விலை உயர்ந்த ஷாம்பூக்களை வாங்கி குளிப்போம்.
இந்த ஷாம்புகள் மற்றும் பல முடி பராமரிப்புப் பொருட்களில், கூந்தலுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும் கடுமையான இரசாயனங்கள் கலந்துள்ளன.

நாம் நமது சருமம் மற்றும் முடிக்கு எவ்வளவு ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்துகிறோமோ அவ்வளவு நன்மை தரும். இதற்கு நாம் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.
இவை தலைமுடியை சுத்தப்படுத்தி, வேர்களை வலுப்படுத்த உதவுகின்றன. பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரியத்தில் முடி வளர்ச்சிக்கும், பொடுகு நீக்கவும் வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே இந்த பதிவில் வெந்தயம் மற்றும் இன்றும் இரண்டு பொருட்கள் கொண்டு தயாரிக்கக்கூடிய ஷாம்பூவை பற்றி தெரிந்துகொள்வது நன்மை தரும்.
வெந்தயப் பொடியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஷாம்பூ செய்யப்படுகின்றது. இது இரசாயனங்கள் இல்லாத பாதுகாப்பான வழியில் பளபளப்பான முடியை உங்களுக்கு தரும்.

ஷாம்புக்கான பொருட்கள்
- ஷிகாக்காய் பவுடர் (1/4 கப்)
- ரீத்தா பவுடர் (1/4 கப்)
- வெந்தயப் பொடி (1/4 கப்)
தயாரிப்பு முறை - நீங்கள் செய்ய வேண்டியது இந்த ரெசிபிக்கான அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, ஒரு காற்றுப் புகாத ஜாடியில் சேமிக்கவும்.

பயன்படுத்தும் முறை
நீங்கள் தலைக்குக் குளிக்கும்போதெல்லாம், அந்தப் பொடிக் கலவையில் இருந்து 2 முதல் 3 டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அதில் வெந்நீர் அல்லது கிரீன் டீ தண்ணீரைச் சேர்க்கவும்.
இந்தக் கலவையை 2 முதல் 3 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் உங்கள் தலைமுடியில் நன்கு தடவவும். சரியான ஊட்டச்சத்து கிடைக்க உச்சந்தலையிலும் முடியின் நுனி வரையிலும் இந்தக் கலவையைத் தடவுவது அவசியம்.
முடிந்த பிறகு, அதைத் வெற்று நீரில் நன்கு கழுவி, உங்கள் தலைமுடியை காற்றில் உலர விடவும்.

முக்கியமான குறிப்புகள்
நுரை வராது: இந்த இயற்கையான ஷாம்பு, வணிக ரீதியான ஷாம்புகளைப் போல அதிக நுரை வராது. காரணம் இதில் நுரைக்கும் இரசாயனம் இல்லை. எனவே, இதைப் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் தலைமுடியில் எண்ணெயைத் தடவ வேண்டாம்.
இரண்டாவது கழுவல்: ஒரு வேளை இந்த ஷாம்பு உங்கள் தலைமுடியை முழுவதுமாக சுத்தம் செய்யவில்லை என உணர்ந்தால் அதற்குப் பின்னர் ஒரு லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி தலைமுடியை கழுவலாம்.
ஒவ்வாமை எச்சரிக்கை: மிக முக்கியமாக இந்த ஷாம்பூவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதாக உங்களுக்கு தெரிந்தால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

ஷாம்பூவின் நன்மைகள்
தலைமுடி வளர்ச்சி: வெந்தயப் பொடி தலைமுடிக்குத் தேவையான புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. இது முடியின் அளவை அதிகரிக்கவும் மற்றும் முடி உதிர்வைத் தடுக்கவும் உதவும்.
நரை முடிக்கு: உங்கள் தலைமுடி அதிகமாக நரைத்தால், இதில் உள்ள ஷிகாகாய் பொடி நன்மை தரும்.
இயற்கை சுத்தம்: ரீத்தா பவுடர் உங்கள் தலைமுடியை இயற்கையாகவே சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பொடுகு நீக்கம்: இந்தச் சத்து நிறைந்த ஷாம்பு, பொடுகை நீக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அறியப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |