தக்காளி, வெங்காயம் இல்லாமல் சாம்பார் செய்ய தெரியுமா?எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க
இந்தியா போன்ற நாடுகளில் சனத்தொகை அதிகரிப்பு காரணமாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மலிகை பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே செல்கின்றது.
அந்த வகையில் சந்தைக்கு சென்று பார்த்தால் தக்காளி, வெங்காயம் ஆகிய பொருட்களின் விலை தலைக்கு மேல் செல்கின்றது.
இது போன்ற நேரங்களில் எப்படி அந்த பொருட்கள் இல்லாமல் குழம்பு வைப்பது என்பது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.
அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் எப்படி சுவையாக குழம்பு வைப்பது என்று தெளிவாக பார்க்கலாம்.
சாம்பார் தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
சாம்பாருக்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சுரைக்காய் - சிறிது (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் பூசணி - சிறிது (துண்டுகளாக்கப்பட்டது)
* பீன்ஸ் - 5 (நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* கத்திரிக்காய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 5 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* புளிச்சாறு - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* துவரம் பருப்பு - 1 கப்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
சம்பார் எப்படி செய்றாங்க தெரியுமா?
சமைக்க ஆரம்பிக்கும் போது நன்றாக துவரம் பருப்பை கழுவி விட்டு அதில் 4 கப் தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், எண்ணெய் விட்டு சூடானதும் மல்லி, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, வரமிளகாய்ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
வறுத்த பொருட்களுடன் கொஞ்சமாக தேங்காய், தண்ணீர் சேர்த்து மைப்போல் அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் கொஞ்சம் சேர்த்து அதனுடன் துண்டுகளாக்கப்பட்டுள்ள காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
காய்கறிகளை கிளறிக் கொண்டு அதில் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வெல்லம், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சுமாராக ஒரு 10 நிமிடங்களுக்கு மூடி வேக வைக்க வேண்டும்.
வெந்தவுடன் புளிக்கரைச்சலை ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
கொதித்த சம்பாரை கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கினால் கமகம வாசனையுடன் சுவையான சாம்பார் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |