மணக்க மணக்க முட்டை கிரேவி குழம்பு!
முட்டை கிரேவியை இன்று சற்று வித்தியாசமான முறையில் செய்து ருசிக்கலாம்.
முட்டையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. அத்தகைய முட்டையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் நல்லது.
முட்டை அவியல், பொரியலை தான் அதிகம் சாப்பிட்டு இருப்போம்.
இன்று சற்று வித்தியாசமாக சுவையான முட்டை கிரேவி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- முட்டை - 4
- தக்காளி - 2
- மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
- சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிது
தாளிக்க
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- பட்டை , கிராம்பு
- வெங்காயம் - 2
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு முட்டைகளை வேக வைத்து கொள்ளவும்.
பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
பிறகு அடுப்பில் பாத்திரத்தினை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
அதனுடன் உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டி அதில் சேர்க்கவும்.
5 நிமிடம் கழித்து மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும். பிறகு முட்டை தொக்கு தயார். இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடால் அருமையாக இருக்கும்.