மதிய உணவிற்கு சூப்பரான கிரில்டு இறால்! பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறும்
அசைவ உணவுகளில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளாக கடலுணவுகளை கூறலாம், உதாரணமாக மீன் வகைகள், நண்டுகள், இறால்கள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள்.
இதனை சிறுவர்களுக்கு தினமும் செய்து கொடுப்பதினால் புரத குறைப்பாட்டினால் ஏற்படும் நோய் நிலைமைகளை குறைக்கலாம்.
அந்த வகையில் இறாலை பயன்படுத்தி செய்யக்கூடிய சுவையான கிரில்டு இறால் செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
இறால் - 500 கிராம்
பூண்டு - 4-5 பெரியது
எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
அரைத்த மிளகு - 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தயாரிப்பு முறை
முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும், இதனுடன் கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 5-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும் ஒரே லேயராக அடக்கி பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.
தொடர்ந்து பாத்திரத்தை கிரில்ன் கீழ் வைக்கவும். இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் காலளவில் வைத்து சமைக்க வேண்டும்.
இதனையடுத்து இறக்கிய இறாலின் மீது கொத்தமல்லி இலைகள் மீண்டும் தூவி இறக்கினால் சுவையான க்ரில்டு இறால் தயார்!