2025ல் இந்த ராசியினரிடம் உஷாரா இருங்க... கூடவே இருந்து முதுகில் குத்துவார்களாம்
நண்பர்கள் போன்று பழகிவிட்டு பின்பு முதுகில் குத்தும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஆபத்தில் உதவும் நபர்களையே உண்மையான நண்பர்கள் என்று பலரும் கூறுவார்கள். கஷ்டத்தில் உதவி செய்பவர்களை விட இன்றைய உலகில் கெடுதல் செய்பவர்களே அதிகமாகியுள்ளனர்.
ஆனால் அவ்வாறு உடன் இருந்து சகுனி வேலை செய்பவர்களை நம்மால் கணிக்க முடியாது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில ராசியினர் கூடவே இருந்து முதுகில் குத்துபவர்களாக இருப்பார்களாம்.
மேஷம்
எப்பொழுதும் ஆக்ரோஷமாக இருக்கும் மேஷ ராசியினரை உங்களது அருகில் வைத்துக் கொண்டால் ஆபத்தாம். அவர்கள் முதுகில் குத்துவிடுவதுடன், தேவை இருந்தால் மட்டுமே மற்றவர்களை அருகில் வைத்துக் கொள்ளும் இவர்கள், தேவையில்லை எனில் சட்டென தூக்கி எரியவும் செய்வார்கள். அடுத்த நொடியே மற்றொரு நபரையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
மிதுனம்
அமைதியாக இருக்கும் தன்மையைக் கொண்ட மிதுன ராசியினர், அடிக்கடி முகம் மாறக்கூடியவராக இருப்பார்கள். மாற்றி மாற்றி பேசும் சுபாவத்தைக் கொண்டுள்ள இவர்கள், தேவையானதை மட்டுமே உங்களிடம் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் நீங்கள் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாத இவர்கள், உங்களை நல்லவர் என்றும், மோசமானவர் என்றும் கூட பேசுவார்கள்.
சிம்மம்
சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் சிம்ம ராசியினர், உங்களுடனே இருந்து கொண்டு உங்களது வாய்ப்பை தட்டிப்பறித்து முன்னோருவார்களாம். இவர்கள் தேவை என்றால், தேவையில்லை என்றால் தூக்கி எறிவதுமாக இருப்பார்கள்... நன்றியை கூட நினைத்துப் பார்க்காத இவர்களிடம் சற்று உஷாராகவே இருக்கனுமாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினரை அவ்வளவு எளிதாக யாராலும் கணிக்க முடியாதாம். உங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் உடனே தூக்கி எறிந்துவிடுவார்கள். மற்றவர்களிடமும் உங்களை தவறாக பேசவும் செய்வார்களாம். ஆகவே இவர்களிடமும் உஷாராகவே இருக்க வேண்டுமாம்.
மீனம்
உங்களிடமிருந்து வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நடிக்கும் மீன ராசியினர், உங்களால் உதவி எதுவும் இல்லையெனில் முதுகில் குத்தவும் தயங்க மாட்டார்களாம். உங்களைப் போன்று வேறொருவர் கிடைத்துவிட்டால் அவர்களுடன் சென்றுவிடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |