தலையில முடியே இல்லாமல் வந்த பிரபாஸ்.. காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்
நடிகர் பிரபாஸ் தலையில் முடியின்றி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபாஸ்
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார்.
இவர், நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் ராஜா சாப் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் மாருதி இயக்கியுள்ளார்.
People Media Factory நிறுவனம் தயாரித்துள்ளனர். முதல் முறையாக ஹாரர் கதைக்களத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முடி இல்லாமல் இருப்பது யார்?
இந்த நிலையில், நடிகர் பிரபாஸின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தலையில் விக்கின்றி காட்சியளிக்கிறார் என கூறி அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
புகைப்படத்தில் பிரபாஸை பார்க்கும் பொழுது வயதானவர் போன்று தெரிகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், “பிரபாஸின் தலைமுடிக்கு என்ன ஆச்சு..” எனக் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த செய்தியை பிரபாஸின் PR குழுவும் இதை மறுத்துள்ளது. இது பிரபாஸின் புகைப்படம் அல்ல, வேண்டுமென்றே சிலர் செய்த பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
