viral video: மரத்தை போல் தன் உடலை மாற்றிக்கொள்ளும் பறவை... வியக்க வைக்கும் காட்சி
இயற்கையின் அலப்பரிய ஆச்சரியத்தை பறைசாற்றும் வகையில் மரத்தை போல் தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு பறவையின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த பறவைகள் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா காடுகளில் செறிந்து வாழும் ஒரு அரிய வகை பறவை இனமாக பார்க்கப்படுகின்றது. இது potoo என்று அழைக்கப்படுகின்றது.
இந்த பறவை மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் போது மரக்கிளைக்கும் பறவைக்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்கு தனது நிறத்தை துள்ளியமாக மாற்றிக்கொள்ளக் கூடியது.
இவ்வாறு போட்டு பறவை எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கின்றது. மரக்கிளை போல் தன்னை மாற்றிக்கொள்ளும் இந்த பறவை அவ்வாறு தன்னை ஒரு நாள் முழுவதும் கூட உறைந்த நிலையில் வைத்திருக்கக் கூடிய சக்தி கொண்டது.
இவ்வாறு உறைந்த நிலையிலும் இதன் உடலில் இரத்த ஓட்டம் இதய துடிப்பு உட்பட அனைத்து உடல் இயக்க செயற்பாடுகளும் சீராக இடம்பெறும் என்பது குறிப்பபிடத்தக்கது.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |