அருமையான உருளைக்கிழங்கு தோசை! ஈஸியாக தயார் செய்வது எப்படி?
காய்கறிகளில் உருளைக்கிழங்கு மிகவும் சுவையானதும் சத்தும் மிகுந்தது. இதில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் கலோரிகளும் குறைவாகவே காணப்படுகின்றது.
அதேபோல் தினமும் செய்து உண்ணும் தோசை இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக உருளைக்கிழங்கு தோசை செய்து சாப்பிடலாமே...
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
மைதா மா - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி தோலுரித்து துருவிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு துருவல், மைதா, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மா பதத்துக்கு நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும்.
பிறகு பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இறுதியாக தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, மாவை தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவைத்து எடுத்தால், சூப்பரான உருளைக்கிழங்கு தோசை தயார்.