Post Office: மாதம் வெறும் 100 ரூபாயில் RD... இதன் பயன்கள் தெரியுமா?
Post Office-ல் மாதம் 100 ரூபாய் RD திட்டத்தில் கட்டினால் என்னென்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மக்கள் தங்களது வருமானத்தில் சிறு பங்கை சேமித்து வைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏனெனில் திடீரென வேலை இல்லையெனில் அத்தருணத்தில் கஷ்டப்படாமல் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் பயன்படுகின்றது.
இந்நிலையில் தபால் நிலையத்தில் பல திட்டங்கள் மூலம் நாம் சேமிக்க முடியும். இதில் தொடர் வைப்புத் திட்டம் (RD) இதில் எவ்வாறு முதலீடு செய்வது, இதன் பயன்கள் என்ன என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
போஸ்ட் ஆபிஸ்
போஸ்ட் ஆபிஸில் RD திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பினரும் பணம் சேர்க்க முடியும். குறைந்தபட்சமாக ரூ.100-லிருந்து ஆரம்பிக்கலாம். ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்புடைய இந்த திட்டத்திற்கு வட்டிவிகிதம் 6.70% ஆகும்.
இதற்கு போஸ்ட் ஆபிஸில் RD கணக்கு திறக்க வேண்டும் பின்பு மாதம் முதலீடை ஆரம்பிக்கலாம். ரூ. 500, ரூ. 600, ரூ. 700, ரூ. 900 மற்றும் ரூ. 1000 வரை முதலீடு செய்யலாம்.
இருப்பினும், நீங்கள் ஒருமுறை தொகையை முதலீடு செய்தால், அதே தொகையை நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும், மேலும் இந்தத் தொகையை நீங்கள் பின்னர் மாற்ற முடியாது.
எவ்வளவு வட்டி கிடைக்கும்?
ரூபாய் 500 வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.30 ஆயிரம் முதலீடு செய்திருந்தால், 6.70 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 35,681 கிடைக்குமாம்.
அதுவே நீங்கள் 1000 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு 60 ஆயிரம் செலுத்தியிருந்தால் முடிவு தொகை ரூ.71,369 கிடைக்கும். ரூ.700 முதலீடு செய்தால் ரூ.49955 கிடைக்கும்.
முன்கூட்டியே மூட முடியுமா?
இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கை மூடினால் அதற்கான சில விதிகளை பின்பற்ற வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு பின்பு நீங்கள் கணக்கை மூடினால், உங்களுக்கு கொடுக்கப்பட்ட வட்டி விகிதத்தின் அடிப்படையில் இதுவரை செலுத்தியிருந்த பணம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தினை குறித்து இன்னும் முழு தகவலைப் பெற வேண்டும் என்றால் தபால் நிலையத்திற்கு சென்று தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |