தோசை மாவு இல்லையா? அப்போ இப்படி பொரி தோசை செய்து கொடுங்க... 15 நிமிடம் போதும்
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவு இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும். அவசர நேரங்களில் சில சமயம் தோசை மாவு இருக்காது.
அப்படியான சமயத்தில் வீட்டில் பொரி இருந்தால் போதும் அதைக் கொண்டு 15 நிமிடம் தோசை மாவை தயார் செய்து அட்டகாசமான சுவையில் மொறு மொறுப்பான தோசை செய்யலாம்.எப்படி எளிமையாக தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பொரி - 2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பொரியை எடுத்து அதில் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
பின்னர் 10 நிமிடம் கழித்து பொரியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, ஊற வைத்த பொரியை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது நீரை ஊற்றி மென்மையான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து 1/2 கப் கோதுமை மாவு மற்றும் 1/2 கப் தயிர் ஆகியவற்றை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவைக் கொண்டு மெல்லியதாக வட்டவடிவில் ஊற்றி, மேலே சிறிது எண்ணெய் உற்றி முன்னும் பின்னும் நன்றாக வேகவிட்டு எடுத்தால், அசத்தலான சுவையில் பொரி தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |