தேனிசைத் தென்றல் தேவா மறைவு: ‘சோறுதான் முக்கியம்’ பாடல் குறித்து இசையமைப்பாளர் உருக்கம்!
மறைந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா அவர்களின் மறைவுக்குப் பின், 'போராட்டம்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் பூவன் மதீசன் தேவா குறித்து பகிர்ந்துக்கொண்ட விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி, ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைத்த திரைப்படம் தான்‘போராட்டம்’.

‘போராட்டம்’ இசையமைப்பாளர் உருக்கம்
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சோறுதான் முக்கியம்’ பாடலைத் தனது தனித்துவமான குரலில் பாடியிருந்தார் தேனிசைத் தென்றல் தேவா. வெளியான போதே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், இணையத்திலும் வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்தது.
தேவாவின் திடீர் மறைவுக்கு பின்னர் இந்தப் பாடல் ரசிகர்களால் மீண்டும் பகிரப்பட்டு, இணையத்தில் புதிய கோணத்தில் கவனத்தைப் பெற்றுள்ளதுடன் தேவாவின் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் 'போராட்டம்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் பூவன் மதீசன் அந்தப் பாடல் உருவான விதம் மற்றும் தேவாவின் திடீர் மறைவு குறித்துப் மிகவும் எமோஷனலாகப் பேசியுள்ளார். இந்த நேர்காணலை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |