மகர ராசியில் தாமதமாக நுழையும் சூரியன்! பொங்கல் பண்டிகை ஜனவரி15 ஆக மாறியது ஏன்?
மகர ராசியில் சூரியன் தாமதமாக நுழையும் சூரியனால் இந்த ஆண்டு பொங்கள் 15ம் தேதி ஆக மாறியுள்ளது.
பொங்கல் பண்டிகை
உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் இணைந்து கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14ம் தேதி வருடந்தோறும் காணப்படும்.
சிறுவயதிலிருந்தே 14ம் தேதி பொங்கல் கொண்டாடியுள்ள நிலையில் இந்த ஆண்டு 14ம் தேதி பொங்கல் கொண்டப்படுகின்றது. இந்த நாள் மாற்றம் எதற்காக? எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 1935ஆம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி அன்று பொங்கல் வந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் 1862 முதல் 1934ஆம் ஆண்டிற்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு தேதியில் மாற்றம் ஏன்?
கடந்த 2008ஆம் ஆண்டிலும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை வந்தது. ஆனால் இந்தாண்டில் மீண்டும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த மாற்றம் 2080ம் ஆண்டு வரை தொர்வதாக கூறப்படுகின்றது. அதன் பின்பு 2081ம் ஆண்டு முதல் 2153ம் ஆண்டு வரை அதாவது 72 ஆண்டுகள் 16ம் தேதி பொங்கல் விழா வருமாம்.
இந்த மாற்றத்திற்கான காரணம் என்னவெனில் தனுஷ் ராசியில் இருந்து சூரியன் தாமதமாக மகர ராசிக்கு நுழைவதே ஆகும். அதாவது 20 நிமிடம் தாமதமாக நுழைகின்றாராம்.
இதே போன்று 3 ஆண்டுக்கு ஒருமுறை சூரியன் மகர ராசிக்கு ஒரு மணிநேரம் தாமதமாக நுழைகின்றதாம். அதுவே 72 ஆண்டுக்கு ஒருமுறை இந்த கிரக ராசிமாற்றம் ஒரு நாளாக மாறிவிடுவதே பொங்கல் பண்டிகை இவ்வாறு ஒரு நாள் தாமதமாக வருவதற்கு காணரமாகும்.