ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பொன்மகன் சேமிப்பு திட்டம்: எப்படி தொடங்குவது?
பொன் மகன் திட்டம் எனப்படுவது பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்ற ஒன்று மத்திய அரசால் 2015இல் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் ஆண் குழந்தைகளை வைத்திருப்பவர்களும் கூட தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு திட்டம் வேண்டும் என அஞ்சலகங்களை அணுகிக் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க இந்த பொன் மகன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தவகையில் ஆண்டுக்கு, 12 முறை என குறைந்தபட்ச தொகையாக ரூ.500 முதல் அதிகபட்சமாக 1,50,000/- ரூபாய் வரையில் இந்த சேமிப்பு தொகையை செலுத்த முடியும்.
நிதியாண்டை அடிப்படையாக வைத்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1% வரை வட்டி வழங்கப்படும்.
18 வயதுக்கு குறைவான குழந்தைக்கு கணக்கு ஆரம்பிக்கும் போது இணைப்பு சேமிப்பு (joint account) கணக்காக ஆரம்பித்துக்கொள்ள முடியும். அதாவது பெற்றோர் மற்றும் குழந்தை பெயரில் கணக்தை ஆரம்பிக்க முடியும்.
குறித்த சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்திற்கு 8.1% வட்டி கொடுக்கப்படும். இருப்பின் ஆண்டிற்கு ஆண்டு வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்.
எனினும் கடந்த 10 ஆண்டுகளாக 7 %க்கும் குறையாத வகையில் தான் வட்டி வழங்கப்படுவதாக அஞ்சலக சேமிப்பு வங்கி அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சேமிப்பு கணக்கில் போடப்படும் பணத்திற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
குறித்த சேமிப்பு கணக்கை ஆரம்பித்தில் இருந்து 5 ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் 50% பணத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.
மேலும் இந்த தொகையை திருப்பி செலுத்த வேண்டி அவசியம் இல்லை. 15 ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் இந்த சேமிப்பு கணக்கை முடித்துக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி கணக்கு ஆரம்பித்து 3 ஆண்டுகளில் வங்கி கடனையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு ஆரம்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்
தங்கள் ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
பெற்றோரின் சரியான முகவரி.
ஆதார் கார்ட்.
pan card மற்றும் புகைப்படம்.
500 ரூபாய் பணம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அருகில் உள்ள தபால் அலுவலகம் முதல் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் வரை எங்கு வேண்டுமானாலும் சமர்ப்பித்து பொன் மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கை ஆரம்பித்துக்கொள்ள முடியும்.
மேலும் மத்திய நிதியமைச்சகத்தால் மாற்றப்படும் வட்டி விகிதங்களை அஞ்சலகங்களிலோ அல்லது இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (Post Office Saving Schemes (indiapost.gov.in) மூலமாகவே அறிந்துக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |