கோவிலில் மனைவியை கட்டுப்போட்டு ராணுவவீரர் செய்த காரியம்... கணவரை தண்டிக்க விடாமல் பொலிசாரை தடுத்த மனைவி
மனைவியை பேய் பிடித்ததாக கூறி கோவிலில் சங்கிலியால் கட்டிவைத்த ராணுவ வீரர் ஒருவரை பொலிசார் எச்சரிக்கை செய்து, அப்பெண்ணை மீட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சேவிளை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் வினோ. இவரது மனைவி அஜிதா. இவர் எம்.எஸ்.சி. பி.எட் படிப்பினை முடித்துள்ள நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவர் வினோ மற்றும் பெண்ணின் பெற்றோரும் சாமியார் துரைராஜ் வீட்டில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குடும்பத்துடன் தங்க வைத்து பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணை பிரம்பினால் அடித்து சங்கிலியால் கட்டப்பட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
இக்காட்சி சமூகவலைத்தளங்களில் பரவியதால், தவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் செம்பொன்விளை பகுதியில் துரைராஜ் என்னும் சாமியார், தனது வீட்டருகே அய்யா கோயில் கிளை ஒன்றினை அமைத்து நடத்திவருவதும், இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பேய் பிடித்ததாக கோரி சித்ரவதை செய்வதும் தெரியவந்துள்ளது.
குறித்த சாமியார் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில், தற்போது பொலிசார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதற்கு காரணமான பெண்ணின் கணவரையும் பொலிசார் கைது செய்யமுயன்ற போது, பாதிக்கப்பட்ட பெண் அப்பாவியாக தனது கணவரை விடுமாறு கூறியுள்ளதைக் கேட்டு, அவரை எச்சரிக்கை செய்து, குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ராணுவ வீரராக பணிபுரியும் அவரது கணவருக்கு மூடபழக்கத்தை நம்பி இவ்வாறு செய்யாதீர்கள் என்றும் நவீன மருத்துவமனையில் நல்ல சிகிச்சை மேற்கொண்டு, அன்பாக கவனித்துக் கொண்டாலே இம்மாதிரியான நபர்கள் சரியாகிவிடுவார்கள் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
