மலைப்பாம்புடன் விளையாடுகிறாரா? மாட்டிக்கொண்டாரா? குழப்பதில் வைரலான வீடியோ
இங்கே நாம் பார்க்கப்போகும் வைரல் வீடியோவில் இருக்கும் நபர் பாம்போடு விளையாடுகிறாரா அல்லது பாம்பின் பிடியிலிருந்து தப்பிக்க முயல்கிறாரா எனப் பார்க்கும் நமக்கே குழப்பமாக உள்ளது.
வைரல் வீடியோ
சமூக வலைத்ளத்தில் பகிரப்படும் அனேகமான வீடியோக்கள் அதிக லைக்குகளை பெற்றுக்கொள்வதற்காக காணப்படுகின்றது. அந்த வகையில் தான் இன்றும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
இங்கே நாம் பார்க்கப்போகும் வைரல் வீடியோவில் இருக்கும் நபர் பாம்போடு விளையாடுகிறாரா அல்லது பாம்பின் பிடியிலிருந்து தப்பிக்க முயல்கிறாரா எனப் பார்க்கும் நமக்கே குழப்பமாக உள்ளது.
வழக்கமாக மலைப்பாம்புகள் தங்களது இரைகளை உடலால் இறுக்கமாக சுற்றி வளைத்து கொல்லும். அதனால்தான் ஒருவரை மலைப்பாம்பு இறுக்கமாக சுற்றிக்கொண்டால், அவர் உயிர் பிழைப்பது கடினம் என கூறுவார்கள்.
இங்கே நாம் பார்க்கப் போகும் வீடியோவில், தரையில் படுத்திருக்கும் நபர் ஒருவரை மலைப்பாம்பு பின்னிப் பிசைந்து கொண்டிருக்கிறது. முதலில் பார்க்கும்போது நமக்கே அதிர்ச்சியாக இருக்கின்றது.
மலைப்பாம்பின் பிடியிலிருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று அவர் முயற்சிப்பதுபோல் தான் நமக்கு தோன்றும்.
ஆனால் கமெரா அவருடைய காலிலிருந்து தலைக்கு நகரும் போதுதான் அவர் சிரித்தபடி இருக்கிறார். எனவே இந்த நபர் பாம்புடன் விளையாடிக்கொண்டு இருப்பது தெளிவாகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |