வீட்டில் இந்த செடிகள் இருந்தாலே போதும்! அதிர்ஷ்டம் தேடி வரும்
வாஸ்து சாஸ்திரங்களின் படி லட்சங்கள் செலவழித்து வீடு கட்டினாலும் ஒருசிலருக்கு எதிர்மறை எண்ணங்களால் வருமானம் நிலைக்காமல் போகலாம்.
இதற்காக பலரும் வாஸ்து செடிகளை வளர்க்க ஆசைப்படுகிறார்கள், ஆனாலும் ஒருசில முறைகளை பின்பற்றினால் மட்டுமே அதிர்ஷ்டம் தேடி வரும், நேர்மறை எண்ணங்களும் வீட்டை சுற்றியிருக்கும்.
இந்த பதிவில் எந்த செடிகளை வளர்க்கலாம், எதை செய்யக்கூடாது என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்வோம்.
எந்த செடிகளை வளர்க்கலாம்?
மா மரம், வேப்பமரம் அல்லது வாழைமரம் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
துளசி, மணி பிளாண்ட், எலுமிச்சை, மல்லிகைப்பூ செடிகள் நேர்மறை எண்ணங்களை பரப்பும்.
வீட்டின் வடகிழக்கு மூலையில் முல்லைக்கொடியை நட்டு வளர்த்து வந்தால் ராகுதோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது, குறிப்பாக பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மிக முக்கியமாக கருவேப்பிலை மரத்தை பாதுகாத்து வளர்த்து வந்தால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும்.
இதுதவிர மூங்கில் செடியை வீட்டின் உட்பகுதியில் அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து வளர்த்தால் அதன் தண்டுகள் வளர வளர செல்வம் கொழிக்குமாம்.
எதை செய்யக்கூடாது?
தென் கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வீட்டு தோட்டத்தை அமைத்துவிடாதீர்கள்.
ரோஜா தவிர முட்கள் நிறைந்த செடிகளை வளர்க்க வேண்டும், பால் போன்ற வெண்மை நிறத்தில் திரவத்தை வெளியிடும் செடிகளையும் வளர்க்க வேண்டாம்.
வீட்டின் முன்வாசலை மறைத்தபடி பெரிய பெரிய மரங்களை வளர்க்கக்கூடாது, இது நேர்மறை எண்ணங்கள் உள்நுழைவதை தடுத்துவிடலாம்.
வீட்டுத்தோட்டத்தில் வளரும் செடிகள் மற்றும் இலைகள் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும், காய்ந்த கருகிப்போன இலைகளை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள்.