Photo Album: குறைந்த செலவில் இலங்கையை சுற்றி பார்க்க வேண்டுமா? கண்கவர் இடங்கள் இதோ!
உலகின் பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என செல்கின்ற நாடு தான் இலங்கை.
இங்கு ஆண்டுதோறும் பல இலட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பயணிகள் தங்குவதற்கு குறைந்த விலையில் விடுதிகள் இருக்கின்றன.
உதாரணமாக ஒரு நாளைக்கான சுற்றுலா கட்டணம் இந்திய மதிப்பில் 1500 ரூ முதல் 2000 ரூ மட்டுமே அறிவிடப்படுகின்றன.
அந்த வகையில், இலங்கையில் காலி கடற்கரை, கண்டி மலைப்பகுதி, அனுராதபுர பொலனறுவை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் பெளத்த விகாரைகள் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இலங்கை மக்களின் கலாச்சாரம், உணவு பழக்கங்கள், பேச்சு, சமயம் சார்ந்த விடயங்கள் முற்றிலும் வேறுப்பட்டவையாக இருக்கும்.
இலங்கை வரும் பயணிகள், இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய உணவு, கொட்டிக்கிடக்கும் வளம், மத்திய மலைநாட்டின் இயற்கை காட்சிகள், மற்றும் விருந்தினர்களை உபசரிக்கும் தன்மை என பல்வேறு விடயங்களை பார்த்து மெய்சிலிர்க்கிறார்கள்.
இலங்கையின் அழகை கண்டுகழிப்பதற்காகவே வருடத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைத் தருவார்கள்.
கொரோனா காரணமாக இலங்கை அரசாங்கம் சுற்றுலாத்துறையை மட்டுபடுத்தியுள்ளது.
பட்ஜெட்டிற்குள் இலங்கையை சுற்றிப் பார்க்க நினைப்பவர்கள் இந்த பதிவின் மூலம் இடங்களை அறிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |