இலங்கையிலுள்ள ராமாயண சான்றுகள்.. கண்டிப்பாக சென்று பாருங்க!
பொதுவாக விடுமுறை காலங்களில் குடும்பத்துடன் எங்கையாவது சுற்றுலா செல்லலாம் என ஆசை கொள்வோம்.
இப்படியான ஆசைகள் வரும் போது இலங்கையை நாம் தெரிவு செய்யலாம்.
ஏனெனின் பொருளாதாரம், இயற்கை, கலாச்சாரம் என சுற்றுலா பயணியொருவர் எதிர் பார்க்கும் அத்தனை விடயங்களும் இங்கு இருக்கின்றது.
அந்த வகையில் இலங்கையில் இருக்கும் சுற்றுலாதலங்களில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ராமாயணத்தால் பாதுகாக்கப்படும் இடங்கள்
1. சீகிரியா பாறை
இந்த இடம் தான் ராவணன் சீதையை சிறைபிடித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கை மக்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டவர்களாக இருந்தாலும் அதிகமாக வந்து செல்லும் இடமாக இந்த இடம் இருக்கின்றது.
2. சீதையை சிறை பிடித்த இடம்
சீதையை சிறை வைத்த இடம் இலங்கையில் நுவரெலியா எனப்படும் ஒரு இடத்தில் இருக்கின்றது. இது அசோக் வாடிகா என்ற தோட்ட மக்களால் மிகவும் பரிசுத்தமாக பராமரிக்கப்படுகின்றது. அனுமான் வந்து சென்ற தடங்கள் வரலாற்றுக்கமைய பாதுகாக்கப்படுகின்றது.
3. திவுறும்பொல(divurumpola) ஆலயம்
அசோக வாடிகைக்கு அருகில் உள்ள பண்டாரவளை என அழைக்கப்படும் நகரில் தான் இந்த ஆலயம் இருக்கின்றது. இது பௌத்தர்களின் புதித தளமாக பார்க்கப்படுகின்றது. சீதையின் கற்பிற்கு கலங்கம் வந்த போது இந்த இடத்திலிருந்து தான் பமடைந்த பூமித் தேவி சீதையை உலகத்திலிருந்து அழைத்துச் சென்ற இடம் என சொல்லப்படுகிறது.
4. ராவணன் எல்லா நீர்வீழ்ச்சி
இந்த நீரிவீழ்ச்சிக்கு அருகாமையில் தான் இராவணன் சீதையை கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளாராம். இதனால் இதுவும் புதித தலமாகவும் பிரபலமடைந்த சுற்றுலாத்தலமாகவும் பார்க்கப்படுகின்றது.
5. தொட்டுபொல கண்டா(Thotupola Kanda)
ராவணன் சீதா தேவியைக் கடத்திய பிறகு, அவன் மலைக்குன்றில் தான் அவருடைய புஷ்ம விமானத்தை தரையிறக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் இங்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |