கூண்டில் இருந்த புறாவை விடுவித்த தம்பி.. ஆத்திரத்தில் கோடாரியால் தாக்கிய கொடூர அண்ணன்!
கூண்டில் இருந்து புறாவை விடுவித்ததற்காக தம்பியை கோடாரியால் அவரது அண்ணனே தாக்கியுள்ள ஒரு கொடூர சம்பவம்புனேவின் சிக்லி மாவட்டத்தில் நடந்துள்ளது. போல்ஹைமாலாவில் வசித்து வருபவர் சாகர் காம்ப்ளே (28). இவர் தாக்கப்பட்டதை நபர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
அதில் தனது மாற்றாந்தாய் மற்றும் மாற்றாந்தாய்க்கு பிறந்த அண்ணன் உட்பட சுமார் ஐந்து பேர் தன்னை கொடூரமாக தாக்கி, பலத்த இரத்தகாயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என புகார் அளித்துள்ளார். அதில், பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு, சாகரின் தம்பி ஸ்ரீதர் வீட்டிலுள்ள கூண்டில் இருந்து புறாக்களை பறக்க விட்டதால், அவை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
அந்த கூண்டு பறவைகள் அனைத்தும் சாகர் தந்தையின் மற்றொரு தாரத்திற்கு பிறந்த மகனான சித்தேஷ்வர் காம்ப்ளேவுக்கு சொந்தமானவையாம். பறவைகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சித்தேஷ்வரும் மற்றவர்களும் சாகரை அவரது தலை, முதுகு, கைகள் மற்றும் கால்களில் கோடாரியால் தாக்கியுள்ளனர். மேலும், அண்டை வீட்டார்கள் அவர்களை தடுத்து நிறுத்தியும் விடவில்லை.
இறுதியாக ரத்தவெள்ளத்தில் இருந்த சாகரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சிக்லி காவல் நிலையத்தில் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.பி. தேஷ்முக் கூறுகையில், சாகர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஆனால் அவர் பல காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் புறா வளர்க்கும் உரிமையாளர்களிடையே ஏற்படும் சண்டை சம்பந்தப்பட்ட ஏராளமான வழக்குகள் இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளன.