புலி உறுமி பார்த்திருப்பீங்க சிரித்து பார்த்ததுண்டா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
இந்தியாவி்ன் தேசிய விலங்கான புலி தனது பற்களைக் காட்டி சிரித்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த விலங்காகக் கருதப்படும் புலி, தன் புத்தியை உபயோகித்து தனக்கான உணவை தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் கொண்டதுடன், அதன் கம்பீர நடையும், உறுமும் சத்தம் பயங்கரமாகவே இருக்கும்.
புலி உருமினால் 3 கி.மீ தூரத்திற்கு அதன் உருமல் சத்தம் கேட்கும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு வேட்டையாடியும், உறுமியும் நீங்கள் புலியை அவதானிப்பீர்கள். ஆனால் புலி சிரித்து யாரும் அவ்வளவு எளிதில் அவதானித்திருக்க மாட்டார்கள்.
இங்கு பலி சிரிக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் மோனா பட்டேல் என்பவர் பகிர்ந்துள்ளார்.
புலி சிரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, கூடவே "புலிகள் பிறக்கும் போது பற்கள் இல்லாமல் தான் பிறக்கும். சில வாரங்களில் பால் பற்கள் முளைக்க துவங்கும். பின்னர் மனிதர்கள் போல அந்த பல் விழுந்து, வேறு பல் முளைக்கும்.
புலிகளின் பற்களுக்கு இடையே நீண்ட இடைவெளி இருக்கும் அப்பொழுது தான் அதனால் தனது இரையை வலுவாக பிடிக்க முடியும்." என புலியின் பல்லை வைத்து ஒரு பாடமே நடத்தியுள்ளார்.
வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், அபாயகரமான விலங்குகள் இப்படி விதவிதமாகக் கொடுக்கும் அரிதானப் போஸ்களை அழகாகப் பதிவு செய்து விடுகின்றனர்.
Tigers are born toothless. After few short weeks,tigers get their milk teeth. Their teeth fall out like humans but not until the adult teeth push the milk teeth out. Tigers have large gaps in their teeth. This makes it easy for them to grasp their prey tightly.#ThePhotoHour ?? pic.twitter.com/ZNJzZKtojl
— Mona Patel ???? (@MonaPatelT) February 13, 2022