உயிருக்கு போராடிட்டு இருக்கான்! யாராவது உதவுங்க- பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகையின் தம்பி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை பியாவின் சகோதரர், வென்டிலேட்டர் உதவி கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழில் கோவா, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் பியாவின் சகோதரரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உத்தரபிரதேசத்தில் உள்ள பரூகாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும், மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார்.
உடனடியாக வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்ட நிலையில், மருத்துவமனையில் வசதி இல்லாததால் தங்களுக்கு உதவுமாறு டுவிட் செய்தார் நடிகை பியா.
ஆனாலும் எந்த உதவியும் கிடைக்காததால் 5 மணிநேரங்களில் பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து பியாவே டுவிட்டரில் பதிவிட ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.