ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக போன் பார்க்குறீங்களா? எச்சரிக்கை பதிவு
ஒரு மணி நேரத்திற்கு மேலாக போன் பார்ப்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு இதுவாகும்.
இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போனை பாவித்து வருகின்றனர்.
இன்னும் உறுதியாக கூற வேண்டும் என்றால் போனிற்கு அடிமையாகிவிட்டு, அதனை விட்டு வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் உள்ளனர்.
பார்க்கும் நபர்கள் அனைவரிடமும் இருக்கும் ஸ்மார்ட்போனில் அமர்ந்த இடத்திலிருந்து உலகத்தையே தெரிந்து கொள்ளலாம். மேலும் இதில் வரும் ரீல்ஸ், கேம்ஸ் இவற்றினை பார்த்துவிட்டு மணிக்கணக்கில் நேரத்தை வீணடிக்கின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் பார்த்தால்
ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒருவர் நபர் செல்போன், லேப்டாப், டேப்லட் என டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படுவதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.
ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சில ஆண்டுகளில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு மேலான நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால் அது மூளை பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |