போனை இப்படியா உபயோகிக்கின்றீர்கள்? நம்ப முடிகின்றதா?
நமது எண்ணங்கள், செயல்கள் என்பவற்றை வைத்துத்தான் நாம் யார்? எப்படிப்பட்டவர்? நமது ஆளுமை என்ன? என்பதை கணித்துச் சொல்ல முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் காலம் மாறிவிட்டது என்பதற்கு பல உதாரணங்கள் நம் கண் முன்னே வந்துவிட்டது. அவற்றுள் ஒன்று என்னவென்றால், நீங்கள் கையடக்கத் தொலைபேசியை எவ்வாறு உபயோகிக்கின்றீர்கள் என்பதை வைத்துக் கூட உங்களைப் பற்றி கூறிவிடலாம்.
யாரும் தொலைபேசியை பிடிக்கும் விதத்தில் நாம் யார் என்பதைப் பற்றிக் கூறமுடியுமா என்று சந்தேகிப்பார்கள். நம்ப முடியவில்லையா? இந்த பதிவைப் பாருங்கள்.
ஒரு கையில் போனை உபயோகிப்பது
எதிலும் அதிக நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பீர்கள். அனைத்தையும் புத்திசாலித்தனமாக செய்வீர்கள். காதல் சார்ந்த விடயங்களில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள அதிக நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள். எந்த அபாயகரமான செயலும் உங்களை பயமுறுத்தாது.
இரண்டு கைகளாலும் உபயோகிப்பது
நீங்கள் விரைவாக முடிவெடுப்பதில் சிறந்தவர். உங்களால் புதிய சூழ்நிலைகளை திறமையாக கையாள முடியும். வேகமாக செயல்பட உங்களுக்குப் பிடிக்கும். காதல் விடயங்கள் உங்களுக்கு ஒத்து வராது. இதனால் உங்கள் காதல் பிரிவில் வந்து முடியும்.
ஒரு கையில் தொலைபேசியை பிடித்து மற்றொரு கையின் ஆள்காட்டி விரலால் உபயோகிப்பது
தனிமையை விரும்புவீர்கள். சிறந்த சிந்தனைகளை உடையவர். காதல் வாழ்வில் நீங்கள் வெட்கப்படுவதால் புதிய பிணைப்புக்கள் உருவாகாது. உங்கள் ஆளுமையின் வெளிப்பாட்டால் சிலர் உங்களை விட்டு விலகிச் செல்வர்.
ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு மற்ற கையின் கட்டைவிரலால் உபயோகிப்பது
நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே எந்த நடவடிக்கையும் எடுக்கவும். நீங்கள் நியாயமானவர். மற்றவர்களால் உங்களை ஏமாற்ற முடியாது. நீங்கள் ஒரு புத்திசாலி. காதல் விடயங்களில் யோசிக்காமல் முடிவுகளை எடுப்பதால் சிக்கல்களில் மாட்டிக் கொள்வீர்கள்.
இவ்வாறு நீங்கள் கையடக்கத் தொலைபேசியை உபயோகப்படுத்துவதை வைத்தே நீங்கள் யார் என்பதை கணித்துவிட முடியும்.