எஜமான் இறுதி ஊர்வலம்: சோகத்தில் உயிரைவிட்ட செல்ல நாய்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உரிமையாளரின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது செல்ல நாயும் மரணமடைந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியபிரதேசத்தின் பெடுல் மாவட்டத்தை சேர்ந்தவர் Pradeep Jain(வயது 67), இவர் Duggu என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார்.
15 வயதான Dugguக்கும் இவர்கள் குடும்பத்தில் ஒருவர் போலத்தான், இந்நிலையில் உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த Pradeep Jain காலமானார்.
அவரது உடலை வீட்டிற்கு கொண்டுவந்ததில் இருந்து சோகமாக இருந்துள்ளது Duggu, உறவினர்களும் அடுத்தடுத்து வீட்டிற்கு வர Dugguவை வேறொரு அறையில் அடைத்துவைத்தனர்.

இரவு முழுவதும் குரைத்துக்கொண்டே இருந்ததுடன் எஜமானை பார்க்க வேண்டும் என துடிதுடித்துள்ளது.
நேற்று மாலை இறுதிசடங்குகள் நடைபெறுவதற்கு முன்னதாக Dugguவை பார்க்க அனுமதித்துள்ளனர், மிக அமைதியாக அருகிலேயே நின்றிருந்தது Duggu.
இறுதி ஊர்வலம் தொடங்கிய சிலநிமிடங்களில் அப்படியே சரிந்து விழுந்த Duggu பரிதாபமாக உயிரிழந்தது.
15 ஆண்டுகளாக கூடவே இருந்த Dugguவால் மரணத்தை தாங்கி கொள்ள முடியவில்லை, Pradeep Jainயை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே Dugguவையும் அடக்கம் செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.