Tamizha Tamizha: ஐயாயிரத்திற்கும் அதிகமான பாம்புகளை பிடித்த பெண்... அவர் சொன்னது என்ன?
தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆபத்தான வேலை செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
இன்று பல தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏனெனில் இதில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படும் தலைப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருந்து வருகின்றது.
அதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியினை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் ஆபத்தான வேலை செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இதில் பெண் ஒருவர் தான் பாம்பு பிடிக்கும் வேலை செய்வதாகவும், ஐயாயிரத்துக்கும் அதிகமான பாம்புகள் பிடித்ததாகவும் கூறினார். அதுமட்டுமின்றி தான் கடைசி மூச்சு வரை இதை தொடர்வதாகவும் கூறியுள்ளார்.
மற்றொருவர் தான் Merchant Navyல் chief officer ஆக வேலை செய்கிறார்.அப்பொழுது அவர் உள்ளே சென்ற பின் கதவுகள் பூட்டியது. அதன்பிறகு தான் போர் நடந்தது..
நாங்கள் வெளியே வந்து பார்த்த போது தான் Missile கப்பலிற்கு சற்று முன் வந்து விழுந்தது என்று கூறினார். அப்பொழுது அவரது மனைவி உனக்கு எதாவது ஆனாலும் கடவுளை நினைச்சிட்டு தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |