மனைவியை கொன்று மூளையை உணவாக சாப்பிட்ட இளைஞர்..
வட அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ நகரில் மனைவியை கொலை செய்து அவரது மூளையை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் மூளையை சாப்பிட்ட கணவர்
வட அமெரிக்காவில் மெக்சிகோ நகரில் வசித்து வருபவர் அவ்வாரோ(32). இவர் மூடப்பழக்கங்கள், மூட நம்பிக்கையை கொண்டவர். இவரது மனைவி மரியா மான்செராட்டை கொலை செய்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பொலிசார் சோதனையில் பிளாஸ்டிக் பையில் மனித உடம்பில் உள்ள சில துண்டுகள் இருப்பதை அறிந்த அவர்கள் குறித்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதாவது கடந்த ஜுன் 29ம் தேதி சாத்தான் தனது மனைவியை கொலை செய்யக் கோரியதாகவும், பின்பு அவரது மூளையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு விட்டு, மண்டை ஓட்டை எரித்துவிட்டு, மற்ற உடல் பாகங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து பள்ளத்தாக்கில் போட்டதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கை என்ற பெயரில் செய்யக்கூடாத விடயங்களை செய்துவிட்டு இவ்வாறு சிறைக்கு சென்றுள்ள சம்பவம் வேதனையாகவும் உள்ளதாக மக்கள் கூறிவருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |