நீந்திச் சென்ற மலைப்பாம்பு தலையை கையில் பிடித்த நபர் - அதிர்ச்சி வீடியோ
நீந்திச் சென்ற மலைப்பாம்பின் தலையை கையில் பிடித்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாம்பு தலையை கையில் பிடித்த நபர்
தினமும் ஏதாவது வீடியோ இணையதளங்களில் வெளியாகி நம்மை அதிர்ச்சி ஆக்கிவிடும். அதேபோல், தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மிக நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று தண்ணீரில் நீந்திச் செல்கிறது.
இதைப் பார்த்த ஒரு நபர் அந்த மலைப்பாம்பை பிடிக்க அதன் கூடவே சென்றுக்கொண்டிருக்கிறார்.
கையில் எந்த உபகரணங்கள் ஏதுமில்லாமல் அந்த மலைப்பாம்பை பிடிப்பதற்காக முயற்சி செய்கிறார்.
முயற்சி செய்து கொண்டிருந்த அந்த நபர் ஒரு கட்டத்தில் அந்த மலைப்பாம்பின் தலையை கைகளால் பிடித்து மேலே தூக்குகிறார். மேலே தூக்கியபோது, அந்த மலைப்பாம்பு பல அடி நீளத்தில் இருப்பதை காண முடிகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.