பேரழகன் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் சோகம்
பேரழகன் படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகை தற்போது அவர் படும் வேதனையை கூறியுள்ளார்.
பேரழகன் நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் ஹீரோ ஹீரோயின்களை விட காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மனதில் என்றும் மறையாமல் காணப்படுகின்றனர். அந்த வகையில் சூர்யா நடித்த பேரழகன் படத்தில் குள்ள பெண்மணி நடிகை கற்பகம் சினேகா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
குறித்த படத்தில் அவர் வரும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை நன்றாகவே சிரிக்க வைத்திருந்தது. ஆம் இப்படத்தில் சூர்யாவுக்கு பெண் பார்க்க போகும்போது மணப்பெண்ணாக வந்து நடிகர் விவேக் உடன் நடிப்பில் அசத்தினார்.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களை குறித்து கூறியுள்ளார். இவரது இயற்பெயர் கற்பகம். இவருக்கு 4 அக்கா ஒரு அண்ணன் இருக்கின்றனர். பிறந்து இரண்டு வயது குழந்தையாக இருக்கும் இவரது அம்மா இறந்துவிட்டாராம். திருமணமான 3 அக்கா வீட்டில் கொஞ்ச கொஞ்ச நாட்களாக மாறி மாறி தங்கியுள்ளார்.
கிழிந்த ஆடை, கெட்டுப்போன அரிசியை சாப்பாடு செய்து கொண்டு சென்ற சினேகா சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், பள்ளிப்படிப்பினை இடையே நிறுத்தியுள்ளார்.
பின்பு இவரைப் போன்று குள்ளமாக இருக்கும் நபரை வீட்டில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவருக்கு நண்பராக நடித்துள்ளாராம்.
தற்போது குடிபழக்கத்திற்கு அடிமையான இவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சூர்யா நடிப்பில் நடித்த பேரழகன் படம் தான் என்னை மக்களிடம் கொண்டு சென்றதாக கூறியுள்ளார்.
அப்படத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு அதில் பாதி பணத்தை ஏஜெண்ட் பறித்துக் கொண்டாராம். தற்போது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த இவருக்கு நடிகர் சூர்யா சிறிய ஜவுளிக்கடை ஒன்றினை வைத்துக் கொடுத்துள்ளராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |