90களின் ரசிகர்களின் கனவு தொகுப்பாளினி பெப்ஸி உமா... தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
90 காலகட்டத்தில் சொல்ல முடியாத அளவிற்கு மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்த பெப்ஸி உமாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி பெப்ஸி உமா
90களில் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த தொகுப்பாளினிகளில் மிகவும் முக்கியமானவர் பெப்ஸி உமா.

அந்த காலகட்டத்தில் சின்னத்திரையை ஆட்சி செய்த சில பிரபலங்களில் ஒருவராக திகழ்ந்த அவர், தனது இனிமையான குரல், தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் இயல்பான தொகுப்புத் திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றார்.
இன்றைய காலத்தில் ஒரு வாய்ப்புக்காக பலர் காத்திருக்கும்போது, பெப்ஸி உமாவைத் தேடி சினிமா வாய்ப்புகளே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தனது அடையாளம் சின்னத்திரை தொகுப்பாளினி என்பதில் உறுதியாக இருந்த அவர், அந்த வாய்ப்புகளை மரியாதையுடன் நிராகரித்ததாக பல முறை தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த காலத்தில் ஒளிபரப்பான அவரது நிகழ்ச்சிகளில் தொலைபேசி மூலம் பேசுவதற்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல பிரபலங்களும் ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சுத் திறனும், ரசிகர்களுடன் பழகிய விதமும் அவரை வீடுதோறும் அறிமுகமான முகமாக மாற்றியது.
தமிழகத்தைத் தாண்டி இந்திய அளவிலும் பிரபலமான பெப்ஸி உமாவின் நிகழ்ச்சிகளை பார்த்து கவரப்பட்ட பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் கூட ஒரு திரைப்படத்தில் நடிக்க அழைத்ததாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வாய்ப்பையும் அவர் ஏற்கவில்லையாம்.

ஒரு காலத்தில் சின்னத்திரையின் ராணியாக இருந்த பெப்ஸி உமா, கடந்த சில ஆண்டுகளாக ஊடக வெளிச்சத்திலிருந்து விலகியே வாழ்ந்து வருகிறார். இதனால் அவரை பொதுவெளியில் காணும் வாய்ப்பும் ரசிகர்களுக்கு மிகவும் அரிதாகிவிட்டது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் பெப்ஸி உமா கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் அவருக்கு "Excellence in Television Entertainment" என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைக் கண்ட ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். "இது நம்ம பெப்ஸி உமாவா?" என்று வியக்கும் அளவிற்கு அவருடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.