தினமும் 6 மிளகை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? மிளகு கஷாயம் குடிக்கலாமா?
சுற்று சூழல் மாறுதல் காரணமாக நோய் தொற்று ஏற்படுவது வழக்கம்.
இந்த பிரச்சனைக்கு தினமும் காலை எழுந்தவுடன் 6 மிளகை சாப்பிட்டு பாருங்கள்.
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.
ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.
மிளகின் பயன்கள்
- மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவில் இருப்பதால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும்.
- தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் மிளகில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை உடலுக்குள் நுழையும்.
- பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி ஏற்படும் நோய்களை தடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
- ஆஸ்துமா, மூட்டு வலி போன்றவை இருந்தால் தினமும் அவர்கள் மிளகு எடுத்து கொள்ளலாம்.
- மிளகில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.மிளகு ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
- வயிறு சரியில்லாதவர்கள் மிளகு சாப்பிட்டால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும்.
- மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றையும் போக்கும்.
- உடல் எடையைக் குறைக்க நினைத்தால் மிளகை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
- மிளகு உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டது.
மிளகு கஷாயம் எப்படி செய்வது?
மிளகு கஷாயம் தயாரிக்க கருப்பு மிளகு, துளசி, பனை வெல்லம், சர்க்கரை மற்றும் தண்ணீர் போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது.
இந்த மிளகு கஷாயத்தை வெறும் 20 நிமிடங்களில் செய்து உங்க சளித்தொல்லையை நீக்கி விட முடியும்.
தேவையான பொருட்கள்
- கருப்பு மிளகு - 1/4 கப்
- துளசி : 10 எண்ணிக்கை
- பனை வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
தயாரிக்கும் முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு மிளகை போட்டு வெடிக்கும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை உரலில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
உடைத்த மிளகு அதனுடன் துளசி, பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்துங்கள்.
பிறகு ஒரு வடிகட்டியைக் கொண்டு கஷாயத்தை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சீரணமின்மை, இருமல் மற்றும் சலதோஷம் அறிகுறிகள் குறையும்.