பணக்காரன் ஆவதற்கான தகுதியை இல்லாமலாக்கும் 7 குணங்கள்.. உடனே மாத்திக்கோங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், குறிப்பிட்ட சில குணம் உள்ளவர்கள் எவ்வளவு தான் உழைத்தாலும் பணக்காரன் ஆக முடியாது என சாணக்கியர் கூறுகிறார். அப்படியான குணங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பணக்காரன் ஆவதற்கான தகுதிகள்
1. எப்போதும் வெளியுலகம் பற்றி சிந்தனை கொஞ்சமாவது இருக்க வேண்டும். அறிவை எந்த வழியிலாவது வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அறியாமை இருந்தால் எவ்வளவு உழைத்தாலும் உங்களால் முன்னேற முடியாது. படிப்பறிவு இல்லாவிட்டால் அனுபவ அறிவை சரி வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2. தேவைக்கு அதிகமான செலவு இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. ஆடம்பர வாழ்க்கையை, அதிக செலவு ஒருவருக்கு கூடாத பழக்கமாக சாணக்கியர் கூறுகிறார். பணத்தை அளந்து அளவாக செலவழிக்க வேண்டும். நிதிசார்ந்த செலவுகளுக்கு யோசித்து முடிவெடுக்க முடியும்.
3. எதிர்மறை எண்ணங்கள் இருப்பவர்கள் எப்போதும் வாழ்க்கையில் முன்னேற முடியும். எதிர்மறையான சிந்தனையை கொண்டவர்கள் எதிர்மறையான விளைவுகளை தான் அனுபவிப்பார்கள். இதனால் வெற்றி வாய்ப்பை எட்டமாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
4. பணக்காரன் ஆக நினைப்பவர்கள் தெளிவான இலக்குகளை வைத்து சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கான பாதையை ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு நடந்து கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் கண்டிப்பாக வெற்றியடையலாம்.
5. எப்போதும் மற்றவர்களை சார்ந்திருக்கக் கூடாது. சுயமான உழைப்பு இருக்க வேண்டும். உழைக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேர்த்து வைக்க வேண்டும்.
6. எதையும் வெறும் சொற்களில் மட்டும் இல்லாமல் செயலிலும் காட்ட முயற்சிக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் மட்டுமே முன்னேற முடியும். இதனை சோம்பல் பிடித்தவர்களால் எதையும் முயற்சிக்க முடியாது.
7. முயற்சித்தால் தோற்று விடுவோமோ? என்று பயம் இருக்கக் கூடாது. வெற்றி வாய்ப்பை அடைய முடியாமல் போய் விடுகிறது எண்ணமும் யாருக்கும் இருக்கக் கூடாது என சாணக்கியர் கூறுகிறார். தோல்வி என்ற திரையிலிருந்து வெளியில் வருபவர்களால் தான் உண்மையில் பணக்காரர்களாக முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |