Prawns - Shrimp: இறாலை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா...
இறாலை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இறால்
பொதுவாகவே கடல் உணவு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்இஅதுவும் இறால் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.காரணம் அதில் உள்ள சுவை தான்.
இறாலில் நிறைய புரத சத்துக்கள்,ஒமெகா 3 போன்ற சத்துக்கள் உள்ளன.நாம் பலர் அதை கிரேவி ஆகவும் வறுவல் ஆகவும் சாப்பிடும் பழக்கம் உள்ளது.ஆனால் நம்மில் பலருக்கு இறால் சாப்பிடுவதால் நிறைய பிரச்சனை ஏற்படுகின்றது.
பொதுவாக ஞாயிறு கிழமைகளில் மீன் எதுவும் கிடைக்கவில்லை நம் மனதிற்கு வர கூடிய ஒன்று இறால்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இறால் சாப்பிடக்கூடாது ஏனென்றால் இறாலில் கொழுப்பு அதிகமாக உ்ளது இது இதய பிரச்சனை உள்ளவர்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் சாப்பிட்டால் அவர்கள் இரத்த நாளங்களில் அடைப்பு வரும் இது மாரடைப்பு போன்ற பிரச்சனைக்கு வழி வகுக்கும்

சிலருக்கு கடல் உணவு என்றாலே பிடிக்காது ஏனென்றால் அது அவர்களுக்கு தோல் தடிப்பு,அரிப்பு,உதடு வீக்கம் அல்லது மூச்சு விடுவதற்கு சிரமம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இறால் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் அது 'அனாஃபைலாக்ஸிஸ் என்ற பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.

யூரிக் அமிலம் பிரச்சளை உள்ளவர்கள் இறால் சாப்பிடக்கூடாது ஏனென்றால் இறாலில் உள்ள பியூரின்கள் நம் உடலில் உ்ள்ள யூரிக் அமிலம் அளவை அதிகரிக்கும். மூட்டு வலி மற்றும் கீல்வாத பிரச்சனை உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது.அது அவர்களுக்கு கடுமையான மூட்டு வலி பிரச்சனை வரும்.

சிறுநீரக நோய் உள்ளவர்கள்: இறால்களில் சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. சிறுநீரகங்கள் பலவீனமாக உள்ளவர்களால் இந்தக் கனிமங்களை உடலில் இருந்து வெளியேற்ற முடியாது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகங்களுக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதனால் பிரச்சினை மேலும் சிக்கலாகிறது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்: கடல் உணவுகளில் அயோடின் அதிகமாக உள்ளது. தைராய்டு மருந்து உட்கொள்பவர்கள் அல்லது தைராய்டு ஏற்ற இறக்கங்கள் உள்ளவர்கள், அதிகப்படியான இறால் சாப்பிட்டால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.
ஆரோக்கியமானவர்கள் கூட இறாலை சமைப்பதற்கு முன் அதன் உள்ளே இருக்கும் கருப்பு நரம்பை அகற்ற வேண்டும், இல்லையெனில் அது செரிமான பிரச்சனைகளையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தக்கூடும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |