5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை
கோவையில் 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை புரியும் நிகழ்ச்சி நடந்துள்ளது.
திருநங்கைகளுக்கு ஒப்பனை
கோவையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் முயற்சியாக 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்யும் வினோத உலக சாதனை நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக சில ஆண்டுகளுக்கு திருநங்கைகள் என்றாலே ஏளனமாகவே பார்த்து வந்தனர். ஆனால் இன்று அவர்களுக்கான அங்கீகாரம், மரியாதை இவை அனைத்தும் கிடைத்து வருகின்றது.
மேலும் பல துறைகளில் திருநங்கைகள் சாதித்து வரும் நிலையில், தற்போது திருநங்கைகள் பக்கம் அனைவரின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தினை மேற்கொள்ளும் வகையில் உலக சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
உலக சாதனை
அதாவது மேக்கப் துறையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், திருநங்கைகளும் சாதிக்கலாம் என்ற தலைப்பில் கோவை தடாகம் சாலையில் ஒப்பனை கலை சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒப்பனை கலைஞர்கள் தங்களது அழகு கலையை பயன்படுத்தி 21 திருநங்கைகளுக்கு வெறும் ஐந்து நிமிடத்தில் ஒப்பனை செய்து அசத்தியுள்ளனர்.
21 திருநங்கைகளை வரிசையாக அமரவைத்த குழுவினர், அவர்களுக்கு கண் மற்றும் முக அழகு, லிப்ஸ்டிக் என அழகை அதிகரிக்க மேக்கப் போட்டுள்ளனர். இதில் வெறும் 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு மேக்கப் போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு ஜாக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதுடன், ஒரே நேரத்தில் 21 திருநங்கைகளுக்கு மேக்கப் போட்ட ஒப்பனை குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.