கொரோனா ஊரடங்கில் மக்கள் அதிகம் கூகுளில் தேடியது என்ன தெரியுமா?
கொரோனா பாதிப்பால் பெரும்பலான கம்பெனிகள் வீட்டிலிருந்தபடியே வேலையை பரிந்துரை செய்து வருகின்றனர். மேலும், உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அச்சம் பலருக்கும் அதிகரித்து இருப்பதால், இந்தியர்கள் பெரும்பாலான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற துவங்கி உள்ளனர்.
இதையடுத்து, கடந்த ஒரே ஆண்டில் மட்டும் ஆன்லைன் மருத்துவம் பற்றிய தேடல் 300 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மேலும், கடந்த 2020 ஆண்டு ஊரடங்கு காரணமாக டிஜிட்டல் சேவைகளின் பயன்பாடு அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதில், கல்வி சார்ந்த தேடல்களில் கல்விமுறை கடந்து தொழில்முறை, புதிய திறன் வளர்த்தல், தொழில் துவங்குதல், வருவாய் ஈட்டுதல் போன்ற துறைகள் பற்றி இந்தியர்கள் அதிகளவு தேடியுள்ளனர்.
2020 கூகுள் தேடல் பற்றிய விவரங்களை அந்நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது.