இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி?
எண் கணித சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவரின் பிறந்த திகதியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் தனித்துவமான தன்மையில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்டுகின்றது.
நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது. எண்களால் ஒருவரை வாழ்வில் வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்லவும் முடியும்.அது போல் பாதாளத்தில் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் 12 மாதங்களில் எந்த மாதமாக இருந்தாலும் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அழகானவர்களாகவும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
எண் 1
எந்த மாதமாக இருந்தாலும் 1, 10, 19 மற்றும் 28 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே வசீகரமான தோற்றமும் மற்றவர்களின் கவனத்தை ஈர்ககக்கூடிய காந்த பார்வையையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் சூரியனால் ஆளப்படுவதால் மற்றவர்களை வசீகரிக்கும் மற்றும் நிர்வகிக்கும் ஆற்றல் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
எண் 5
எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் அசாத்தியமாக வசீகர தன்மையை கொண்டிருப்பார்கள்.
இவர்களிடம் பழகும் போது காரணமே இன்றி இவர்கள் மீது ஈர்ப்பு அதிகரித்துவிகின்றது. மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் மிகுந்த அழகானவர்களாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
இவர்கள் தங்களின் உடை மற்றும் அழங்காரங்களின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
எண் 8
12 மாதங்களிலும் 8, 17 மற்றும் 26 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பதால், நீதி மற்றும் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் இருக்கும் இயற்கை அழகு மற்றவர்களை விடவும் இவர்களை வசீகரமானவர்களாக காட்டுகின்றது.
இந்த எண்களில் பிறந்தவர்கள் இயற்கையான வசீகரத்தையும் கருணையையும் கொண்டுள்ளனர், அவர்களின் கண்களும், உதடுகளும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |