இந்த தேதிகளில் பிறந்தவர்கள் படிப்பில் புலி போல இருப்பார்களாம் - உங்க தேதி என்ன?
எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் எனப்படுகின்றது.
எண் கணிதம்
எண் கணிதத்தின் பார்வையில், மனிதனின் பிறந்த தேதி அவரது வாழ்க்கையின் பல அம்சங்களை தீர்மானிக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது.
அந்த வகையில், குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி எதிர்கால வாழ்க்கையை தங்களுக்கு உரியதாக மாற்றி சிறப்பாக வாழ்வார்கள் எனப்படுகின்றது.

இவ்வவாறு பிறந்தவர்கள் சிறுவயதில் இருந்து தங்களுக்குள் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி தங்களுக்கான எதிர்காலத்தை தாங்களே சிறப்பாக அமைத்துக்கொள்வார்கள் எனப்படுகின்றது.
படிப்பு என்பது நாம் புத்தகங்களை படித்து பணம் சம்பாதிப்பதில் மட்டும் வராது. நமது வாழ்கையை ஒரு கஷ்டமான சிக்கலான காலம் வரும் போது நம் மூளையை பயன்படுத்தி அந்த சூழ்நிலையை மாற்றி அமைக்க தான் படிக்க வேண்டும்.

எந்த திகதிகள்?
மாதத்தின் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் சிறந்த ஆளுமை உடையவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களின் அதிபதி வியாழன் அதாவது குரு பகவான்.
குரு அனைத்து கிரகங்களுக்கும் குருவாக கருதப்படுகிறார். அதனால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மனதளவிலும், புத்தி அளவிலும் கூர்மையானவர்களாக இருப்பார்களாம். அவர்கள் பிறப்பு முதலே அறிவில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்களாம்.
கடினமான காலங்களில் தங்கள் மூளையை பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவார்கள். இந்த தேதிகளில் பிறந்த நபர்கள் மிகுந்த சுயமரியாதை உடையவர்களாக இருப்பார்கள்.

எந்த ஒரு நபரின் தனிப்பட்ட விஷயங்களிலும் தலையிடமாட்டார்கள்.
3ஆம் எண்ணை கூட்டு எண்ணாக கொண்ட இந்த தேதியில் பிறந்தவர்கள் கல்விக்கும், அறிவுக்கும் அலைய வேண்டியதில்லை. எளிதில் கல்வி பெற்று ஞானத்தில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் நல்ல இடத்தை அடைவார்கள்.
இதேபோன்று 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் சிறப்பு அறிவு ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்களின் கூட்டு எண்ணான 7க்கு அதிபது கேது என்பதால், திறமையானவர்களாக செயல்படுவார்களாம்.
கல்வி மூலம் அறிவை பெற்று புகழை பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தங்கள் ஞானத்தால் எதிர்காலத்தில் பெரிய பதவியை அடைகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |