தெய்வீக சக்தியால் பாதுகாக்கப்படும் 4 திகதிகளில் பிறந்தவர்கள் - உங்கள் திகதியும் இருக்கா?
ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவமான ஆளுமை இருக்கும் என்று எண்கணிதம் கூறுகிறது. எண்கணிதத்தின்படி, சில குறிப்பிட்ட பிறந்த எண்கள் தெய்வீக சக்திகளால் பாதுகாக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.
யாராவது அவர்களின் வாழ்க்கை, வேலை அல்லது மன அமைதியைக் கெடுக்கும் வகையில், மாந்திரீகம், கண் திருஷ்டி அல்லது தீய எண்ணங்கள் மூலம் தடைகளை ஏற்படுத்தினால், இந்த சக்திகள் அவர்களை நிச்சயம் பாதுகாக்கும்.
அந்த தெய்வீக சக்திகள் அவர்களின் முன்னோர்களாகவோ, குல தெய்வமாகவோ அல்லது வேறு தெய்வமாக இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவர்கள் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். யார் அந்த தேதிகளில் பிறந்தவர்கள் என்பதை பார்க்கலாம்.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்க்ளின் விதி எண் 1 ஆகும். இந்த எண்கள் கிரகங்களின் அதிபதியான சூரியனால் ஆளப்படுகின்றன. இவர்கள் சில தெய்வீக சக்திகளால் ஆன்மீகரீதியாகப் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களின் சக்திவாய்ந்த ஆளுமையிலும், அவர்கள் பேசத் தொடங்கும் போது மற்றவர்கள் அதற்கு கட்டுப்படும் விதத்திலும் இதை நீங்கள் உணரலாம். இதனால்தான் அனைவரும் அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் சந்திக்கும் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் அவர்கள் இந்த பாதுகாப்பு கவசமே பாதுகாத்து மீட்டு கொண்டு வரும்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 2 ஆகும். இந்த எண்கள் சந்திரனால் ஆளப்படுகின்றன, இது ஒரு நீர் கிரகமாகும். இவர்கள் சந்திரனால் வழிநடத்தப்படுகிறார்கள். மேலும் சந்திரனின் ஆற்றல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தன்னுடைய நெற்றியில் சந்திரனை அணிந்திருக்கும் சிவபெருமானின் ஆற்றலாலும் இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். இவர்கள் மிகவும் களங்கமற்ற இயல்புடையவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால், அந்த இரு சக்திகளும் இவர்களுக்கு பாதுகாப்பையும் ஆசீர்வாதங்களையும் வழங்குகின்றன.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் தைரியம், சக்தி மற்றும் மன வலிமை நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தெய்வீக சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இருககும் போர் வீரன் போன்ற வலிமை மூலம் அவர்கள் தீய சக்திகள் மற்றும் பிற தீங்கிழைக்கும் ஆற்றல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இந்த தெய்வீக பாதுகாப்பு அவர்களுக்கு அச்சமின்மையையும், எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான உடல் வலிமையையும் கொடுக்கும். மேலும் அவர்களின் மறைமுக எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கேது கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி கேது ஒரு நிழல் கிரகம் மற்றும் அது தனிமை, மர்மம் மற்றும் உள்ளுணர்வைக் குறிக்கிறது. இவர்கள் நேர்மறை மாய சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார்கள், இது அவர்களை ஒரு சக்திவாய்ந்த நபராக மாற்றுவதற்கான ஆற்றலை கொடுக்கும். மேலும், அவர்களின் உள்ளுணர்வின் காரணமாக, அவர்கள் பொருள் இன்பங்களை விட ஆன்மீக உலகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).