சனி தோஷத்தை போக்கும் பவுமாஸ்வினி: ஸ்ரீ மகாவிஷ்ணு அருளால் நலம் பெறுபவர்கள் யார் தெரியுமா?
பொதுவாக சிலரது ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கும், இது பல வருடங்கள் நீடிக்கும் தோஷங்களில் ஒன்று.
மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணையும் போது உருவாவது. இந்த தோஷத்திற்கு நிறைய பரிகாரங்கள் செய்வார்கள்.
பவுமாஸ்வினி
அந்த வகையில் சனி தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த நாளாக இன்றைய நாள் பார்க்கப்படுகிறது.
இதன்படி இன்று செவ்வாய்க்கிழமையும், அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக சேரும் நாள். இந்த நாளை “பவுமாஸ்வினி” எனப்பார்கள்.
இன்றைய தினம் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பல மடங்கு அதிகமான பலனைத் தருகிறது.
பரிகாரங்கள்
குறிப்பாக இது போன்ற நாட்களில் ஸ்ரீ மகாவிஷ்ணு அருள் பெறுவதற்காக தயிர் சாதத்தை ஊறுகாயுடன் சேர்த்து ஆழ்வார்கள் சன்னதியில் தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு பக்தர்களுக்கும் வழங்கலாம் இது போன்ற பரிகாரங்கள் இன்றைய நாளின் முழு பலனைப் பெற உதவுகிறது.
இப்படியான பரிகாரங்களால் மகாவிஷ்ணு அருளால் சிறந்த கல்வி அறிவு ஏற்படும் மற்றும் ஜாதகப்படி சனி கிரகத்தால் ஏற்படும் கஷ்டங்கள் விலகி நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.