சுகர் நோயாளியும் தேடி தேடி ருசிக்கும் முளைக்கட்டிய பாசிப்பருப்பு தோசை! இனி தூக்கலான சுவையில் சாப்பிடுங்க
ஆரோக்கியமான உணவுகளில் முளைக்கட்டிய பாசிப்பருப்பு தோசையும் ஒன்று.
முளைக்கட்டிய பச்சைப் பயறில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. மேலும், மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
முளை கட்டிய பச்சைப் பயற்றை உட்கொள்வது செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் முடிவுக்கட்ட உதவுகிறது.
கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முளைக்கட்டிய பாசிப்பருப்பு உதவி செய்வதால் நீரிழிவு நோயாளிகள் அச்சம் இன்றி சாப்பிடலாம்.
இனி முளைக்கட்டிய பாசிப்பருப்பு சேர்த்து சுவையான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முளைக்கட்டிய பாசிப்பருப்பு தோசை செய்ய தேவையான பொருட்கள்
- கடலை மாவு -1 கப்
- முளைகட்டிய பச்சை பயறு -1/2 கப்
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்
- மல்லித் தூள்- அரை டீஸ்பூன்
- கரம் மசாலா- அரை டீஸ்பூன்
செய்முறை
முளைகட்டிய பச்சை பயற்றை நன்றாக கழுவி எடுத்து கடலை மாவுடன் கலக்கவும்.
பிறகு அந்த கலவையில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
இதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றவும்.
அதைச் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
முளைக்கட்டிய பாசிப் பருப்பு சேர்ப்பதால் தோசையின் சுவை தூக்கலாக இருக்கும்.